எஸ்.ஐக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தள்ளுவண்டிக் கடை சிறுவனை தாக்கிய எஸ்.ஐக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
கோவையில் பெற்றோருடன் தள்ளுவண்டி கடையில் வியாபாரம் செய்த 16 வயது சிறுவனை உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில் விளக்கம் கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம் மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரத்தினபுரி பகுதியில் கடந்த 19 ஆம் தேதி இரவு தள்ளுவண்டியில் டிபன் வியாபாரம் செய்த வேலுமயில் என்பவர் தனிநபர் இடைவெளியை பின்பற்றவில்லை எனக் கூறி கடையை மூடுமாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் செல்லமணி கூறியுள்ளார்.
அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் வேலுமயிலின் 10ஆம் வகுப்பு படிக்கும் மகன், உதவி ஆய்வாளரின் பைக்கில் இருந்து சாவியை எடுத்ததோடு, அவரை தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு போலீசார் சிறுவனை லத்தியால் தாக்குவது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இச்சம்பவத்துக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு விளக்கம் கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம், கோவை மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்