புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்... முழு விவரம்...!

புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்... முழு விவரம்...!
புதுச்சேரியில் வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் அனைத்து கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மதுபான கடைகள் இரவு 8 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் போராட்டம், பொதுக்கூட்டம் ஊர்வலத்துக்கு தடை நீட்டிக்கப்படுகிறது. பொது இடங்களில் 5 பேர் வரை கூடுவதற்கும் ஜூலை 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. இரவு 10 மணியிலிருந்து 5 மணி வரை ஊரடங்கு முழுமையாக கடுமையாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும். அனைத்து கடைகள், கோவில்கள் தொழிற்சாலைகளில் தேர்மல் ஸ்கேன் மூலம் மக்களை பரிசோதித்த பின்பே அனுமதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தடை இல்லை. அவர்கள் முழுமையாக பரிசோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தபடி, மேலும் 5 மாதங்களுக்கு இலவச அரிசி, பருப்பு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி. உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு பெட்ரோல், டீசல் உயர்வில் இருந்து தொழிலாளர்கள், பொது மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
கடந்த நான்கு மாதங்களாக புதுச்சேரியின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநில அரசுக்கு உதவும் ஒரு நிலையை உருவாக்க முன்வரவேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்