58 பேருக்கு கொரோனா... ஷாக் ஆன மக்கள்!

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா... ஷாக் ஆன மக்கள்!
சேலத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியானது.
பின்னர் நடந்த பரிசோதனையில், இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த மேலும் 58 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.37%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  5.14%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்