கந்து வட்டி கேட்டு தொந்தரவு... இளம்பெண் தற்கொலை!

கந்து வட்டி கேட்டு தொந்தரவு... மனமுடைந்த இளம்பெண் தற்கொலை!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பசுபதி-சங்கீதா தம்பதியருக்கு 2 வயது பெண் குழந்தை மற்றும் 4 மாத பெண் குழந்தையும் உள்ளது. 
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பசுபதி மேச்சேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் ரூ.15 ஆயிரம் கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார். 
கணவர் பசுபதி, தொடர்ந்து 3 மாதங்கள் சரியான தவணையை கட்டி முடித்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வேலையை இழந்ததால் தவணை கட்ட முடியாமல் இருந்துள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் பசுபதி வீட்டில் இல்லாதபோது, தனியார் பைனான்ஸ் கம்பெனியை சேர்ந்த இருவர் வீட்டுக்கு வந்து சங்கீதாவிடம் பணம் கட்டச் சொல்லி நிர்பந்தித்துள்ளனர். 
இதனால் மனமுடைந்து இளம்பெண் சங்கீதா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக ஆய்வுக்காக சங்கீதாவின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேட்டூர் கோட்டாட்சியர் மற்றும் ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்துவட்டி நெருக்கடியால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.37%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  5.14%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்