கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக சங்கரநாராயணன் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீநிமன்றத்துக்கு மத்திய அரசின் சார்பில் இதுவரை மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி வந்தார். ஆறு ஆண்டுகளாக மத்திய அரசு எதிர்மனுதாரராக உள்ள வழக்குகளில் இவர் சென்னை உயரநீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்து மத்திய  அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு இவர், இப்பதவியில் நீடிப்பார் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.45%
 • தவறான முடிவு
  20.61%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.93%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்