பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை

பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை... இருவர் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சந்து மணி ராஜா. இவரது மகன் சின்னதுரை (வயது 30). இவர் மக்கள் தேசம் கட்சியின் நகர செயலாளராக உள்ளார். ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (28). 2 பேரும் நண்பர்கள். இவர்கள் ஆத்தூர் விநாயகபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் இவர்களது வீட்டில் 4 பெண்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக ஆத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்- இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அந்த வீட்டில் 4 பெண்கள் மற்றும் சின்னதுரை, மோகன்பாபு ஆகியோர் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். போலீசாரின் விசாரணையில் மோகன்பாபு, சின்னதுரை ஆகியோர் அந்த 4 பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும், அவர்கள் 2 பேரும் இதே போன்று பல பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
செல்போன் மூலமும், முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல பெண்களுடன் சின்னதுரை, மோகன்பாபு ஆகியோர் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வார்கள். பின்னர் அந்த பெண்களில் யாருக்காவது ஆண்களுடன் தொடர்பு உள்ளதா? என்பதை அறிவார்கள். கணவர் தவிர வேறு ஆண்களுடன் தொடர்பு உள்ள பெண்களை கண்டுபிடிப்பார்கள்.
உடனே அந்த பெண்களை தொடர்பு கொண்டு, ஆண்களுடன் உள்ள தொடர்பை உங்களது குடும்பத்தில் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றால், எங்களது வீட்டுக்கு வந்து, நாங்கள் சொல்லும் நபர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி 2 பேரும் மிரட்டி வந்துள்ளனர். இதன்படி அவர்கள் வாடகைக்கு வசித்து வந்த வீட்டுக்கு 10-க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததுடன், வேறு சிலருடனும், அந்த பெண்களை தங்க வைத்து, பணம் சம்பாதித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மோகன்பாபு, சின்னதுரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சிக்கி இருந்த 4 பெண்களிடமும், போலீசார் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது, ஒழுங்காக இருக்க வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். கைதான 2 பேரும் எத்தனை பெண்களை சிக்க வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்? அவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்