இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பொள்ளாச்சி பஸ் கண்டக்டர் கைது....

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பொள்ளாச்சி பஸ் கண்டக்டர் கைது....
இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பொள்ளாச்சி பஸ் கண்டக்டர் கைது....

பொள்ளாச்சியில் 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய கண்டக்டரை போலீசார் இன்று கைது செய்தனர்.

பொள்ளாச்சியை சேர்ந்த 37 வயதான பாலசந்திரன் பஸ் கண்டக்டராக பணிபுாிந்து வருகிறார். அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த 20 வயதான இளம் பெண் சாந்திக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கி பழகினர்.

இதனால் சாந்தி கர்ப்பம் அடைந்தார். அந்த தகவலை பாலசந்திரனிடம் கூறியபோது, அவர் சாந்தியின் மனதை மாற்றி கர்ப்பத்தை கலைக்க வைத்தார். அந்த சம்பவத்துக்கு பிறகு சாந்தி பாலசந்திரனிடம் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் சாதியை காரணம் காட்டி கல்யாணம் செய்து கொள்ள மறுத்தி இருக்கிறார்.

அதனால் சாந்தி பாலசந்திரனை விட்டு விலக தொடங்கினார். ஆனால் பாலசந்திரன் தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி உள்ளார். இல்லையென்றால் நாம் இருவரும் இருக்கும் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனையடுத்து சாந்தி பாலசந்திரன் குறித்து போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் பாலசந்திரனை கைது செய்தனர். பாலியல பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சட்ட பிாிவுகளில் பாலசந்திரன் மீது போலீசார் குற்றஞ்சாட்டு பதிவு செய்தனர்.  

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com