காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தென்மேற்கு பருவக்காற்று , வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி ,தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 23ம் தேதி வரை தென்மேற்கு , மத்திய மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ. வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.