சென்னையில் கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழப்பு! மக்கள் அதிர்ச்சி

சென்னையில் கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழப்பு! மக்கள் அதிர்ச்சி

சென்னையில் 37,070 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 501 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com