திருச்சியில் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் 189 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 126 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான மருத்துவர் மற்றும் பயிற்சி மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.