ஊரடங்கு காரணமாக மக்கள் மன அழுத்தத்தை எப்படி போக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஊரடங்கு காரணமாக மக்கள் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் ஏற்படும் அழுத்தத்தை எப்படி போக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அதன்படி…
நெருக்கடியான சூழலில் சோகம் , மன அழுத்தம், குழப்பம், பயம் அல்லது கோபம் ஏற்படுவது இயல்பு
நம்பிக்கைக்குரியவர்களிடம் பேசுவது ஆறுதலாக இருக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தொடர்புக் கொண்டு பேசவும்.
வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலில் சுகாதாரமான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். சரியான உணவு , தூக்கம் , உடற்பயிர்சி மற்றும் வீட்டின் இருப்பவர்களிடம் உரையாடுதல் மற்றும் நண்பர்களுடன் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் உரையாடுதல் ஆகியவை மன ஆறுதலை அளிக்கலாம்.
சூழ்நிலையை சமாளிக்க புகைப்பிடித்தல், மது அருந்துதல் அல்லது பிற மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்.
மனதளவில் சோர்வடைந்தால் மருத்துவ நிபுணர் அல்லது ஆலோசகருடன் உரையாடவும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குத் தேவையான உதவிகளை பெற சரியாக திட்டமிடுங்கள்.
சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்படுங்கள்.
உலக சுகாதார மையம் போன்ற நம்பகத்தனமான நிறுவனம் வழங்கும் செய்திகளை வாசியுங்கள்.
ஊடகங்களில் செய்திகளைக் கண்டு மன அழுத்தம் ஏற்பட்டால் செய்திகள் காண செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
வாழ்க்கையில் கடினமான சூழலை எதிர்கொள்ள நீங்கள் பயன்படுத்திய யுக்திகளை பட்டியலிட்டு சவாலான இச்சூழலையும் எதிர்கொள்ள முயற்சி செய்யவும்.