காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்றைக்கு இரண்டு மடங்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து வழக்கத்தை விடவும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்றைக்கு இரண்டு மடங்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊடரங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கத்தைக் காட்டிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்றைக்கு இரண்டு மடங்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள 300 கடைகளில் கடந்த வார விற்பனை 18 கோடியாக இருந்தது எனவும் நேற்றைய விற்பனை மட்டும் 36 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில கடைகலில் நேற்று மாலையே சரக்குகள் அனைத்தும் விற்கப்பட்டதால் கடைகள் 5 மணியுடன் மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.