வேலூர் சரகம்: 18 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் - டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவு

வேலூர் காவல் சரகத்தில் பணியாற்றி வந்த 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டி.ஐ.ஜி முத்துசாமி
டி.ஐ.ஜி முத்துசாமி

திருவண்ணாமலை உள்பட 4 மாவட்டங்களில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றி வந்த புனிதா திருவண்ணாமலை குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்படுகிறார்.

செய்யாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த கலையரசி ராணிப்பேட்டை தீவிர குற்றப் பிரிவு, குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த கிருஷ்ணவேணி வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்.

திருவண்ணாமலையில் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த ராமச்சந்திரன் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருவண்ணாமலை நிலஅபகரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்த முரளிதரன் போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்.

போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கவிதா செய்யாறு மதுவிலக்கு பிரிவுக்கு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள முரளிதரன் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் பணியாற்றி வந்த தனலட்சுமி செங்கம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்.

அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த லதா அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு, சேத்துப்பட்டில் பணியாற்றி வந்த பிரபாவதி போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்.

ராணிப்பேட்டை தீவிர குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த தீபா வேலூர் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, வேலூரில் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த பேபி திருவண்ணாமலை மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்.

வேலூர் மாவட்ட தீவிரக் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த கவிதா பாகாயத்துக்கு, திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசில் பணியாற்றி வந்த பாரதி சோளிங்கருக்கு, சோளிங்கரில் பணியாற்றி வந்த முருகானந்தம் திருவண்ணாமலை சைபர்கிரைம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்.

குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த நிர்மலா திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு, வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சியாமளா குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தமிழரசி சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்படுகின்றனர்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com