தமிழ்நாடு
பொள்ளாச்சி வீடியோ பகிர்வு… காவல்துறை எச்சரிக்கை…
பொள்ளாச்சி வீடியோ பகிர்வு… காவல்துறை எச்சரிக்கை…
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்தால் கைது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்தால் கைது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இணை இயக்குனர் அன்பு கூறுகையில், பாலியல் வழக்குகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்வதும் குற்றமாகும்.
இப்படி பகிரப்படும் விடியோவில் சிறுவர்கள் இருந்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் பொள்ளாச்சி சம்பவங்கள் போன்ற வீடியோக்களை பகிர்வதால் வழக்கின் வழக்கின் தன்மையை பாதிக்கும். எனவே இதுபோன்ற வீடியோக்களை பகிரவேண்டாம் என்று எச்சரிக்கையுடன் கூறியுள்ளார்.