சென்னையில் சிசிடிவி கேமரா அமைப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது.
சென்னையில் சிசிடிவி கேமரா அமைப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது.
சென்னை போக்குவரத்து காவல்துறை வசதிக்காக ரூ.3 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 2011ம் ஆண்டு கையெழுத்தானது.
இதற்கான டெண்டர் லுக்மேன் இன்டஸ்டீரிசுக்கு ஒதுக்கப்பட்டது. 3 மாதத்தில் ரூ.2.61 கோடி பணமும் முதல் தவணையாக வழங்கப்பட்டது. இந்த பணியை 12 மாதத்திற்குள் முடித்து கொடுக்க வேண்டும். ஆனால் 8 ஆண்டுகள் ஆகியும் 1 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை.
ஆனால், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போதும், வர்தா புயலின் போதும் கேமராக்கள் சேதம் அடைந்ததாகவும் எழுத்துப்பூர்வமாக காரணங்களை தெரிவித்திருக்கின்றனர். இதில் முறைகேடு நடந்ததிருப்பதாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கும் நடந்து வந்தது.
எந்த திட்டமாக இருந்தாலும் பணிமுடிந்த பிறகே பணம் வழங்க வேண்டும். ஆனால் 90 சதவீத தொகையை முன்கூட்டியை வழங்கியிருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது. டெண்டரிலும் முறைகேடு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகே யார் யார் இந்தமுறைகேடில் ஈடுபட்டுள்ளனர் என்கிற விவரம் தெரியவரும்.