பொள்ளாச்சி விவகாரம்…திருநாவுக்கரசுக்கு உதவிய கல்லூரி தோழி எங்கே…?

பொள்ளாச்சி விவகாரம்…திருநாவுக்கரசுக்கு உதவிய கல்லூரி தோழி எங்கே…?

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சிக்கியுள்ள திருநாவுக்கரசுக்கு உதவிய கல்லூரி மாணவியை பிடிக்க போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சிக்கியுள்ள திருநாவுக்கரசுக்கு உதவிய கல்லூரி மாணவியை பிடிக்க போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.

இளம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தல், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட வலியுறுத்தல் என்று பொள்ளாச்சியை சேர்ந்த சில இளைஞர்கள் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தை உலுக்கி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கைதான முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு அவருடன் படித்த சேலத்தை சேர்ந்த கல்லூரி தோழி ஒருவர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்தபோது அவர் போலீஸ் கண்ணில் சிக்காமல் இருக்க அவரது தோழிதான் அடைக்கலம் கொடுத்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

அவரை கண்டுபிடித்து விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளியே வரும் என்று போலீசார் நம்புகின்றனர். எனவே அந்த பெண்ணை பிடிக்க தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.

அந்த பெண் யார்? எதற்காக உதவினார்? என்கிற விவரம் அந்த பெண் பிடிபட்ட பிறகே தெரியவரும்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com