நாடாளுமன்ற தேர்தலில், போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதற்காக திமுக- காங்கிரஸ் இடையேயான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில், போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதற்காக திமுக- காங்கிரஸ் இடையேயான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறவுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுவினரும் 3ஆம் கட்டமாக ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். எனவே, இன்று மாலை திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், திமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.