காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்து வரும் சோமாஸ் கந்தர் சிலை சீரமைப்பு பணியில் பொன். மாணிக்கவேல் தலைமையில் 30 பேர் கொண்ட குழு பாதுகாப்பு அளித்தது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்து வரும் சோமாஸ் கந்தர் சிலை சீரமைப்பு பணியில் பொன். மாணிக்கவேல் தலைமையில் 30 பேர் கொண்ட குழு பாதுகாப்பு அளித்தது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் உற்சவர் சிலை சேதமடைந்ததாக கூறப்பட்டது. அதற்கு பதிலாக வேறு ஒரு புதிய சிலை வடிவமைக்கப்பட்டது.
இந்த சிலை வடிவமைப்பின் போது முறைகேடு நடந்ததாக பக்தர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்தார். அப்போது சிலையில் ஒரு துளி கூட தங்கம் கலக்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உற்சவ விழா தொடங்கியுள்ளது. இதில் பழைய சிலைகளை வைத்து வீதியுலா நடத்த வேண்டும் என்று பக்தர்கள போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மாமல்லபுரம் ஸ்தபதி குழுவினர் பக்தர்கள் முன்னிலையில் சோமாஸ்கந்தர் சிலையை சீரமைத்தனர். இதற்கு கோர்ட் உத்தரவுப்படி பொன்.மாணிக்கவேலு தலைமையில் 30 பேர் கொண்ட குழு பாதுகாப்பு அளித்தது.