தமிழ்நாடு
அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்!
அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்!
உள் தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
உள் தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை என்றும், சென்னையை பொருத்தவரை வானம் தெளிவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் அதிகப்பட்ச வெப்பநிலையாக 34டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.