தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 3.39 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 3.39 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது என்றார். தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் 94454 67707 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அனுப்பலாம் என்றும், மேலும், 1800-4256-669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்றும், அதேசமயம், ரூ.10 லட்சத்துக்கு மேல் உரிய ஆவணத்துடன் கொண்டு சென்றால், வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை இதுவரை நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.39 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில் சோதனை நடைமுறைகள் இருக்கும் என்றும் சத்யபிரதா சாஹூ கூறினார்.