பொள்ளாச்சி பாலியல் வழக்கில், தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், தடவியல் துறையிடம் ஆய்வுக்காக ஒப்படைத்துள்ளனர். குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து குற்றவாளிகள் பயன்படுத்திய பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. பொள்ளாச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தை தடுக்கும் பொருட்டு, பொள்ளாச்சியில் சில தனியார் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.