சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தினால் அழித்து விடும்: மயில்சாமி அண்ணாதுரை!

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தினால் அழித்து விடும்: மயில்சாமி அண்ணாதுரை!

பொள்ளாச்சி சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அனைவரது மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு எதிராக மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பொள்ளாச்சி சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது  என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், பிள்ளைகளின் நடவடிக்கைகள் மீது பெற்றோர்கள் தனிக் கவனம் செலுத்தி கண்காணிப்பில் வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களை சரியான பாதையில் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார். சமூக ஊடகங்களை தகவல் தொடர்புகளுக்காக பயன்படுத்தாமல் தவறாக பயன்படுத்தியால், இறுதியில் அது வாழ்க்கையை அழித்து விடும் என எச்சரித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com