பாம்பன் கடல் நீர் நிறம் மாறியது

பாம்பன் கடல் நீர் நிறம் மாறியது
பாம்பன் பகுதியில் கடந்த சில நாட்களாக வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் கடல்நீர் நிறம் மாறி காட்சி அளிக்கிறது.
ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக வழக்கத்துக்கு மாறாக பலத்த சூறை காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது.
இந்த நிலையில் பாம்பன் பகுதியில் கடந்த சில நாட்களாக வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் கடல்நீர் நிறம் மாறி காட்சி அளிக்கிறது. காற்றின் வேகம், கடல் அலைகளின் வேகத்தால் கடலின் அடியில் உள்ள பாசி, தாழை செடிகள் கடலின் மேல்பகுதிக்கு வந்துள்ளதுடன் கடல்நீர் நிறம் மாறியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்