வடமாநிலங்களில் தான் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது - வேளாண்துறை செயலாளர்

வடமாநிலங்களில் தான் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது - வேளாண்துறை செயலாளர்

வடமாநிலங்களான பீகார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது.

 வடமாநிலங்களான  பீகார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது. 
இந்தியாவின் தெற்குப் பகுதியில் வெட்டுக்கிளி ஆபத்து குறைவாகவே உள்ளது இருக்கும் என்றும், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் என்றும், மேலும் தமிழகத்தில் 200 வகையான வெட்டுக் கிளிகள் உள்ளதாக வேளாண்துறை செயலாளர்
 ககந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் நன்மை செய்யும் வெட்டுக்கிளி வகைகளும் இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மாவட்ட வாரியாக வேளாண், தீயணைப்பு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்,  வெட்டுக்கிளி வந்தால் அதனை அழிப்பதற்கும் தயார் நிலையில் இருக்க   அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,  வெட்டுக்கிளிகளை அழிக்க 3 வகையான வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com