சென்னையில் கொரோனா பரிசோதனை மையங்களில் குவியும் பொதுமக்கள்
சென்னையில் தினந்தோறும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் வந்த உடனேயே பரிசோதனை கூடங்களுக்கு செல்கின்றனர். இதனால் ஆய்வுக்கூடங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
காலை 8 மணி முதலே வரிசையில் காத்திருக்கின்றனர். தனியார் ஆய்வகங்களிலும் கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்ய ஒரு பக்கம் குவிந்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை செய்ய பலர் காத்திருக்கின்றனர். பரிசோதனை முடிவுகள் 8 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை ஆகிறது.