தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும், 5 லட்சத்து 53 ஆயிரத்து 543 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 லட்சத்து 18 ஆயிரத்து 391 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 லட்சத்து 33 ஆயிரத்து 101 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.8,84,87,944 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com