செங்கல்பட்டில் இன்று மேலும் 45 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டில் இன்று மேலும் 45 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டில் இன்று மேலும் 45 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,362ஆக அதிகரித்துள்ளது. 6,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113ஆக உள்ளது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 1000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில்,இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,045ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com