4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு: மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு: மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்ததாக மருத்துவ நிபுணர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ நிபுணர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர், "மக்கள் தொகை அதிகமாக உள்ள சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.
எனவே, கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் முக கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்துள்ளோம்" என தெரிவித்தார்.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com