தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் கொலை: பதற்றம் - போலீசார் குவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் தலைவன்வடலியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற மாணவர், கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
இது நிலையில், நேற்று மாலை நடை பயிற்சிக்கு சென்ற அவர் நீண்ட நேரம் வீடு திரும்பாததால், உப்பாற்று ஓடைப் பாலம் அருகே அவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், தலைவன்வடலி மற்றும் கீழேகிரனூரில் இருபிரிவினரிடையே மோதல் இருந்ததால் சத்தியமூர்த்திக்கு சிலருடன் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிய வந்தது. இதன் காரணமாக சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் போலீசார் அவரது தலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அவரது உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். கொலையாளிகள் இளைஞரின் தலையை வெட்டி, கையோடு எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.