கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் முதல் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக ஆலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஓட்டல்கள், மால்கள், பொழுதுபோக்கு மையங்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. எனவே நிபந்தனைகளுடன் மேலும் பல புதிய தளர்வுகளை மத்திய-மாநில அரசுகள் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.