புழல் சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா

புழல் சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு

புழல் சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,246ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உயர் பாதுகாப்பு கொண்ட புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக மாநில காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "புழல் சிறையில் இருந்து 30 பேரில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள கைதிகள் சிறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் போன்ற முற்றிலும் மூடப்பட்ட இடங்களில் கூட இந்த கொரோனா தொற்று பரவியுள்ளதால், சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்" என கூறியுள்ளார்.
புழல் சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவியதையடுத்து, மாதவரத்தைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் குழு, கடலூர் மற்றும் திருச்சி சிறைகளில் ஒரு சில கைதிகளுடன் நெருக்கமான இடங்களில் இருந்ததாக அறியப்பட்ட 90 கைதிகளிடமிருந்து மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com