கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மார்ச் 21 முதல் உரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தற்போது நான்காவது ஊரடங்கு மே 31 அன்று முடிவடையும்.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மார்ச் 21 முதல் உரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தற்போது நான்காவது ஊரடங்கு மே 31 அன்று முடிவடையும். மேலும் அடுத்த 5-வது கட்ட ஊரடங்கு குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து முதலமைச்சர்களிடமும் தொலைபேசியில் மூலம் ஆலோசனை நடத்தினார்
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை ஏற்றிச் செல்ல மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தற்போது பேருந்துகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போக்குவரத்து அதிகாரிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்தால் பேருந்துகளை இயக்கத் தயார் நிலையில் இருக்குமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இதனால் கோவை பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றிப் பயணிக்க இருக்கைகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமா்ந்து பயணிக்க முடியும். அதே போல், பேருந்தில் நின்று பயணிப்பவா்கள், 2 மீட்டா் இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும் பேருந்துகளை இயக்க அனுமதி கிடைத்தவுடன் பணிக்குத் திரும்பும் ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு முகக் கவசம், கையுறைகள், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என கூறினார்.