வரும் ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று இன்னும் பரவாமல் இருக்க நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டிருந்தது. அதில் ஒருசில மாநிலங்களை தவிர சிறப்பு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுய். அதில் தமிழகத்தில் சிறப்பு ரயில் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வரும் ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே வாரியம் கூறுகையில், ஜூன் 1ம் தேதி முதல் சென்னையை தவிர்த்து 4 வழித்தடங்களில் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து கோவை -காட்பாடி,கோவை -மயிலாடுதுறை மதுரை -விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கிடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.