கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் நேற்று 827 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 874 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் அதிக தொற்று கண்டறியப்பட்டது இதுதான் முதல்முறை. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,246ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு 765 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 9 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்