நிலத்தகராறு "பெண் உயிரோடு தீவைத்து எரிப்பு"

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான தேவராஜிக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இது குறித்து திருநாவுக்கரசின் மனைவி அன்புக்கரசிக்கும், தேவராஜின் மனைவி வசந்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
வசந்தாவுக்கு ஆதரவாக அவரது மருமகள்கள் சுமித்ரா, ரேவதி உறவினர் கருணா ஆகியோர் வந்து மோதலில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் அன்புக்கரசி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்தனர்.
இதில் உடல் கருகிய அன்புக்கரசி சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தா, சுமித்ரா, ரேவதி, கருணா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்