ரயில்வே பாதுகாப்பு படையினர் 15 பேருக்கு கொரோனா

ரயில்வே பாதுகாப்பு படையினர் 15 பேருக்கு கொரோனா
சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம் பார்சல் அலுவலகம் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் 15 ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒரு அறையில் தங்கியிருந்து ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதில் ஒரு ரயில்வே பாதுகாப்புப்படை வீரர், சென்னை ரயில்வே கோட்ட தலைமையகத்தின் 5வது தளத்தில் செயல்படும், ரயில்வே பாதுகாப்புப்படை அலுவலகத்தில் பணிபுரிந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த மற்ற 14 ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த 15 ரயில்வே பாதுகாப்பு படையினரும் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே பாதுகாப்புப்படை, ரயில்வே போலீசாருக்கு கொரோனா பாதிப்பு தொடரும் சம்பவத்தால் போலீசாரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்