தென் தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை தரைக் காற்று தொடர்ந்து வீசக்கூடிய நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை அளவு 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகக்  கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 
அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்