கோவையில் 19 நாட்களாக கொரோனா தொற்று இல்லை

கோவையில் கடந்த 3ஆம் தேதி கடைசியாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு கடந்த 19 நாட்களாக கோவையில் புதியதாக கொரோனா தொற்று இல்லை.
இதுகுறித்து சுகாதாரதுறை அதிகாரிகள் கூறும்போது, கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க கோவை மாநகராட்சியில் 100 வாகனங்கள் மூலம் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களிடம் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரம் பேர் வரை கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என்று எதுவும் கிடையாது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கடந்த 13ஆம் தேதி குணம் அடைந்தார். இதையடுத்து கொரோனா தொற்ற இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 19 நாட்களாக கோவையில் புதியதாக கொரோனா தொற்று இல்லை. எனவே கோவை மாவட்டம் இன்னும் சில நாட்களில் பச்சை மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்