எஸ்கேப் ஆன கொரோனா நோயாளி

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 7,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,364ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,768 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயனாவரத்தை சேர்ந்த 55 வயதான நபர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடியவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்