கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது

அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, "அரசின் வழிமுறையை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. அரசின் நடவடிக்கைகளால்  தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது.
வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. புறநகர் பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. ஆட்டோக்கள் இயக்கவும், சலூன் கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்" என கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்