நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி

நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி
சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்கலாம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது முடி திருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் நாளை முதல் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. 
தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது.
பணியாளர்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக்கூடாது.
முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது" என கூறியுள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.09%
  • தவறான முடிவு
    20.8%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.89%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்