கடலூரில் 1, 500 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 8 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள்

கடலூரில் 1, 500 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு  8 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள்


கடலூரில் உள்ள 1, 500 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 8 லட்சம் மதிப்பில் அரிசி, பருப்பு,ரவா, கோதுமை மாவு மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்பு. கடலூர் முன்னாள் எம்எல்ஏ கோ. ஐயப்பன்  வழங்கினார்.

 
ஊரடங்கு உத்தரவால் வேலைவாய்ப்பு இழந்து வருவாய் இன்றி வாழ்வாதாரம் தொலைத்த ஏழை எளிய கூலி தொழிலாளிகளுக்கு நிவாரண உதவிகள் மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ அவரின் ஆலோசனையின்படி கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் தொடர்ந்து நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகிறார். 2.50 லட்சம் மதிப்பில் சலவை தொழிலாளர்கள், பரம்பரிய இசைக்கலைஞர்கள், சிகை அலங்கார தொழிலாளர்கள் என 500 நபர்களுக்கும், 3.50 லட்சம் மதிப்பில் கடலூர் நகர வேன், கார், சரக்கு வாகனம் வாடகை வாகன ஓட்டுனர்கள் 650 நபர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கினார். இன்று ரூபாய் 8 லட்சம் மதிப்பில் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர்,துறைமுகம் என நகரின் அனைத்து பகுதியில் உள்ள 1500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி பருப்பு கோதுமை மாவு உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் அனைத்து வகையான காய்கறிகள் கொண்ட தொகுப்பை இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு, கடலூர் நகர செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சுந்தர், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் டி.ஏ.பி. பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்