மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் சட்டப்படி நடவடிக்கை

மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை: ஏ.கே.விஸ்வநாதன்
முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன், அண்ணாசாலை, ஸ்பென்சர் அருகே, போக்குவரத்து போலீசாரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாகனங்களில் முகக்கவசம் அணியால் வரும் பொதுமக்களுக்கு முக கவசங்களை காவல் ஆணையர் வழங்கினார். 
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், முகக்கவசம் அணியாமல் பொது மக்கள் வெளியே வரக் கூடாது. அவ்வாறு வரும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 
பொது இடங்களுக்கு நடந்து வரும் போது,  மக்கள் முக கவசம் அணியாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.100 அபராதமும், வாகனங்களில் வருபவர்கள் முகக் கவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்