சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,795ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 1,231 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,032 பேருக்கும், அண்ணாநகரில் 719 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதேபோல், தண்டையார்பேட்டையில் 823 பேரும், தேனாம்பேட்டையில் 926 பேரும், திருவொற்றியூரில் 228 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 605 பேருக்கும், பெருங்குடியில் 112 பேருக்கும், அடையாறில் 472 பேருக்கும், அம்பத்தூரில் 376 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 96 பேருக்கும், மாதவரத்தில் 186 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 130 பேருக்கும், மணலியில் 115 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்