"135 கர்ப்பிணிகளுக்கு கொரோனா" பாதிப்பு

சென்னையில் 135 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம், மற்ற மாவட்டங்களை விட சென்னையில் மிக பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
இந்த நிலையில், சென்னையில் 135 கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, தமிழகத்தில் கொரோனா வைரசால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 48 பேரும், எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 34 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 23 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 பேரும் என மொத்தம் 135 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 135 கர்ப்பிணி பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்