சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு திரைப்பட நடிகரும், இயக்குனரும், கழக நட்சத்திர பேச்சாளரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க துணைத் தலைவரும், அரசு சின்னத்திரை விருது தேர்வுக் குழு உறுப்பினருமான எஸ்.ரவி மரியா நன்றியினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய ரவி மரியா, தமிழக அரசு ஊரடங்கு அறிவித்த போது சிறிய மற்றும் பெரிய கடைகளும், சிறு மற்றும் பெரிய தனியார் நிறுவனங்களும் அரசு அலுவலகங்களும் இயங்க முடியாத சூழ்நிலையை சந்தித்தன. அதில் மிக முக்கியமாக மக்களை சந்தோசப்படுத்துகின்ற சினிமா என்னும் பெரிய திரைப்பணிகளும், சின்னத் திரைப்பணிகளும் கிட்டத்தட்ட 2 மாதங்களாக எந்த பணியும் செய்ய முடியாமல் முடங்கிப் போய் இருந்தன. இதனால் சினிமா தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். அத்தோடு சினிமா தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு செய்வதறியாது திகைத்துப் போயினர். சினிமா தொழிலை தவிர வேறுதொழில் செய்வதை அறியாத திரைக்கலைஞர்களும், சின்னத்திரை கலை ஞர்களும், திரைத் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் திரைப்படத் துறை நல வாரியம் மூலம் திரைப்படத் துறையின் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கின்ற ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.1000 செலுத்த முதலமைச்சர்  பழனிசாமி ஆணை பிறப்பித்தார். அது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 
கடந்த சில தினங்களுக்கு முன், படப்பிடிப்பு முடிந்த படங்களுக்கு படப்பிடிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகளை ஆரம்பிக்க முதலமைச்சர் பழனிசாமி அனுமதி அளித்தார். கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேலாக போஸ்ட் புரொடக்சன் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதன் மூலம் நிறைய பேர்களின் வாழ்வாதாரம் மீண்டும் கிடைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. 
மேலும், சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த முதல்வருக்கு திரைத்துறையை சார்ந்து வாழும் என்னுடைய  கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து உதவிய செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்