வி.பி. துரைசாமியின் பதவி பறிப்பு...

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமியை விடுவிப்பதாக, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுபற்றி திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வி.பி. துரைசாமியை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக, திமுக துணைப் பொதுச்செயலாளராக அந்தியூர் ப. செல்வராஜ் எம்.பி., நியமிக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை வி.பி. துரைசாமி கடந்த திங்கள்கிழமை மாலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்