குடும்பத்தில் குட்டையை கிளப்பிய கூகுள் மேப்: நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என பாதிக்கப்பட்டவர் அடம்பிடிப்புகூகுள் மேப்பில் உள்ள யுவர் டைம்லைன் (Google Map – Your Timeline)) பதிவுகளில் உண்மைக்கு மாறான பதிவுகளால் குடும்ப சிக்கல், குடும்ப வன்முறை, சித்ரவதை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுவதாக பாதிக்கப்பட்ட நபர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் ஆர்.சந்திரசேகரன். இவர் மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் வைத்து நடத்திவருகிறார்.  சந்திரசேகரனின் மனைவி அவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் அவரது செல்போனை வாங்கி, அதில் கூகுள் மேப்-பின் யுவர் டைம் லைன் என்ற செயலியை ஆராய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதில், கூகுள் மேப் சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்குக் கூட சென்றுவந்ததாக காட்டியுள்ளது. இதனால் அவரது மனைவி தூக்கம் இல்லாமல் அதைப்பற்றியே சிந்தனையோடு இருந்து, அவர் மட்டும் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரையே பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார். மே மாதம் 20-ஆம் தேதி அவர் செல்லாத இடங்களுக்கு சென்றுவந்ததாக காட்டியதால் குடும்பத்தில் சந்தேகமும், குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளும் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக குடும்ப உறவினர்கள், மனநல மருத்துவர்கள் என பல தரப்பினரும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், கூகுளை நம்பிய சந்திரசேகரனின் மனைவி அவரை நம்பத் தயாராக இல்லை. இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்த சந்திரசேகரன், கூகுள் மேப் பதிவுகளை இணைத்து, கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நீதி வழங்கவும், நஷ்ட ஈடு கோரியும் (தொகை குறிப்பிடவில்லை) மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவரை சமாதானம் செய்ய முயன்ற  காவல்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.61%
 • தவறானது
  17.9%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.9%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்