தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கே.சுப்பிரமணியபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி .
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கே.சுப்பிரமணியபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (55). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். இவர் சுப்பிரமணியபுரம் மேலத்தெருவை சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அச்சிறுமியின் தாயார், கடம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் ராமமூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ராமமூர்த்தி சுப்பிரமணியபுரம் அருகே வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட ராமமூர்த்தி மீது இதற்கு முன்னர் ஏற்கனவே மனநிலை பாதித்த பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக ஓட்டப்பிடாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.