தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த உம்ஃபன் புயலானது, தெற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு பகுதியில் சுமார் 660 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகைக்கு கிழக்கே சுமார் 650 கிலோமீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.
இது நாளை வரை ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து அதி தீவிர புயலாக மாறக்கூடும், அதன் பின் மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக தெற்கு வங்க கடல் பகுதியில் காற்று சுமார் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், இதன் காரணமாக மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உம்ஃபன் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தர்மபுரி. கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு. வட தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் இராமநாதபுரம் மாவட்டம் வட்டம் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்“ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.